வேலை தொடங்கும் முன்பே கட்டணம்
உங்கள் கோப்பைத் தொடங்கும் முன்பே கட்டணம் தெரியும் — வாடகை வருமானம் போன்ற கூடுதல் வேலைகளுக்கும் சேர்த்து. எங்கள் கட்டணங்கள் இந்த தளத்திலேயே உள்ளன.
கட்டணங்களைப் பார்க்க →CPA பட்டயக் கணக்காளர் · ஸ்காபரோ
Ari A. Ariaran, CPA, CGA — ஸ்காபரோ குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் தனிநபர் மற்றும் கம்பனி வரி, கணக்கியல், நிதித் திட்டமிடல் சேவைகள். பத்து வருடங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் நம்பும் குழுவிடமிருந்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் அன்பான சேவை.
இங்கே தொடங்குங்கள்
எங்கள் சேவைகள்
முதல் வரி அறிக்கையிலிருந்து CRA கேள்விகள் உள்ள கம்பனி வரை — நாங்கள் செய்து, விளக்கி, வருடம் முழுவதும் உங்களுடன் இருப்போம்.
ஊழியர்கள், குடும்பங்கள், மாணவர்கள், முதியோர், புதிதாக வந்தவர்களுக்கான T1 அறிக்கைகள் — உங்களுக்கு உரிய ஒவ்வொரு credit உடனும்.
மேலும் அறிய →கம்பனி வரி அறிக்கைகள், கணக்குப் பதிவு, GST/HST, சம்பளம், கம்பனி பதிவு, SR&ED, CRA தணிக்கை ஆதரவு — உங்கள் வணிகத்திற்கு பின்னால் CPA குழு.
மேலும் அறிய →RRSP, TFSA உத்திகள், ஓய்வுக்கால வருமான திட்டமிடல், சொத்து திட்டமிடல் — வரி கால முடிவுகள் உங்கள் நீண்டகால இலக்குகளுக்கு சேவை செய்ய.
மேலும் அறிய →ஏன் எங்களுடனேயே தொடர்கிறார்கள்
உங்கள் கோப்பைத் தொடங்கும் முன்பே கட்டணம் தெரியும் — வாடகை வருமானம் போன்ற கூடுதல் வேலைகளுக்கும் சேர்த்து. எங்கள் கட்டணங்கள் இந்த தளத்திலேயே உள்ளன.
கட்டணங்களைப் பார்க்க →கம்பனி வரி அறிக்கைகள், GST/HST, SR&ED, CRA தணிக்கைகள், கம்பனி பதிவு, வாடகை மற்றும் சுயதொழில் வருமானம் — CPA தலைமையிலான குழுவால் நேரடியாகச் செய்யப்படும்.
வணிக சேவைகள் →வாடிக்கையாளர்கள் ஆள் மாறி மாறி அனுப்பப்படமாட்டார்கள். Ari, Stephen, Viji, Kavitha, Tharsy — ஒவ்வொரு வருடமும் புதியவரிடம் மீண்டும் விளக்க வேண்டியதில்லை; அதே குழுவுடன் நீங்கள் இருப்பீர்கள்.
குழுவை சந்திக்க →நீங்களே செய்யலாமே — ஏன் நாங்கள்?
Tax software நீங்கள் சொல்வதை மட்டும் செய்யும். நீங்கள் சொல்ல நினைக்காததை அதற்கு தெரியாது — உங்களுக்கு உரிய credits, முடிவை மாற்றும் நேரம், claim செய்யலாம் என்று தெரியாத செலவுகள். சரியான கேள்விகளை கேட்பதுதான் ஒரு கணக்காளரின் வேலை.
இவை பொதுவான நிலைமைகளின் உதாரண காட்சிகள் — வாடிக்கையாளர் பதிவுகள் அல்ல. உங்கள் எண்கள் உங்களுடையவை; இலவச ஆலோசனைக்கு கொண்டு வாருங்கள், நாங்கள் பார்ப்பதை நேர்மையாக சொல்வோம்.
அம்மாவை வீட்டில் பராமரித்துக்கொண்டே பல வருடங்களாக தானே தாக்கல் செய்தார்.
நாங்கள் கண்டது: தெரியாமலே விடுபட்ட caregiver credit மற்றும் disability tax credit — முந்தைய வருடங்களுக்கும் claim செய்யப்பட்டது.
வாகனம் ஓட்டி சம்பாதித்து, basement-ஐ வாடகைக்கு விட்டார் — வருமானத்தை காட்டினார், செலவுகளை விட்டுவிட்டார்.
நாங்கள் கண்டது: வாகன செலவுகள், home-office பங்கு, mortgage வட்டி, பழுதுகள் — முறையாக ஆவணப்படுத்தி claim செய்யப்பட்டது.
தொடங்கியபடியே தனிநபராக வளர்ந்து வரும் contracting வணிகத்தை நடத்தினார்.
நாங்கள் கண்டது: சரியான நேரத்தில் கம்பனி பதிவு, குடும்ப நிலைக்கு ஏற்ற சம்பளம்-dividend கலவை.
எப்படி நடக்கும்
Middlefield & McNicoll அலுவலகத்திற்கு நேரில் வாருங்கள், அல்லது பாதுகாப்பான போர்டல் மூலம் அனுப்புங்கள்.
உங்கள் அறிக்கை எங்கள் குழுவால் தயாரிக்கப்பட்டு, தாக்கல் செய்யும் முன் — என்ன கட்ட வேண்டும் அல்லது என்ன திரும்பக் கிடைக்கும், ஏன் என்று — உங்களுடன் விளக்கப்படும்.
நாங்கள் CRA-இடம் தாக்கல் செய்து உங்கள் பதிவுகளை ஒழுங்காக வைத்திருப்போம். ஜூலையில் CRA கடிதம் வந்தால்? எங்களை அழையுங்கள் — அதுவும் எங்கள் சேவையில் அடக்கம்.
வாடிக்கையாளர் கருத்துகள்
சுருக்கம் · மொழிபெயர்ப்பு2017 முதல் வாடிக்கையாளர் — "மிகச் சிறந்த சேவை, திறமையான குழு" என்கிறார்.
“I have been Ari's client since 2017 and is the best service I am experiencing since then. He got a very efficient and highly skilled team to serve my personal and corporation taxes.”
சுருக்கம் · மொழிபெயர்ப்பு10 வருட வாடிக்கையாளர் — "அன்பான, அக்கறையான குழு; GTA-வில் யாருக்கும் பரிந்துரைக்கிறேன்."
“I am extremely happy with the services & expertise provided by Ari and his staff. They helped me last 10 years... They are friendly & caring for you. I highly recommend their office for any body wants to do personal & business tax in GTA.”
சுருக்கம் · மொழிபெயர்ப்புசிக்கலான வரி பிரச்சனையில் — "வரிச் சுமையை குறைக்க தீர்வு கண்டார்; தொடர்ந்து நல்ல ஆலோசனை."
“When I was facing a complex tax issue, he worked diligently to find a solution that minimized my tax liability. Also provided ongoing financial advice that helped me make informed decisions.”
ஆம் — எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் தமிழில் சேவை பெறுகிறார்கள். முதல் அழைப்பிலிருந்து இறுதி பரிசீலனை வரை எல்லாமே தமிழில் செய்யலாம்.
அடிப்படை தனிநபர் அறிக்கை ஒருவருக்கு $75 முதல். வாடகை வருமானம் போன்ற கூடுதல்கள் முன்கூட்டியே சொல்லப்படும் (வாடகைக்கு $60 கூடுதல்) — முழு விவரம் கட்டணப் பக்கத்தில் உள்ளது. வேலை தொடங்கும் முன்பே கட்டணம் தெரியும்.
உங்கள் slips (T4, T5, T4A…), கடந்த வருட Notice of Assessment, விலக்குகளுக்கான ரசீதுகள் (RRSP, மருத்துவம், நன்கொடை, குழந்தை பராமரிப்பு), தேவைப்பட்டால் வாடகை/வணிக பதிவுகள். சந்தேகமா? அழையுங்கள் — உங்கள் நிலைமைக்கு என்ன தேவை என்று சொல்கிறோம்.
ஆம். முந்தைய வருடங்களுக்கான திருத்தங்கள், தாக்கல் செய்யாத அறிக்கைகள், மற்றும் CRA பரிசீலனைகள், தணிக்கைகள், மறுப்புகளுக்கு உங்கள் சார்பாக நாங்கள் பதிலளிப்போம்.
நேரடியாக வரலாம்; ஆனால் வரி காலத்தில் முன்பதிவு செய்தால் காத்திருக்க வேண்டாம். ஒரு நிமிடத்தில் online முன்பதிவு செய்யலாம், அல்லது அழைத்தால் நேரம் ஒதுக்குகிறோம்.